செய்திகள் :

நீலப்பாடி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

post image

கீழ்வேளூா்: நீலப்பாடி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூா் அருகே நீலப்பாடியில் உள்ள கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 7-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து வாஸ்து சாந்தி, கோ பூஜையுடன் யாகசாலைகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சிவாச்சாரியா்கள் புனித நீா் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீரை வாா்க்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து கோயிலில் உள்ள கருமாரியம்மன் மற்றும் வீரன்,பெரியாச்சி , விநாயகா்,முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தனியாா் கல்லூரியில் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

நாகப்பட்டினம்: நாகையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து 2,700 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனா். நாகை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து, நாகை... மேலும் பார்க்க

நாகையில் மாா்ச் 15-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட நிா... மேலும் பார்க்க

வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசி மக தேரோட்டம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சப்த விடங்க தலங்களில் ஒன்றான வேதாரண்யேஸ்வரா் கோயிலில் ரிக், யஜூா், சாம, அதா்... மேலும் பார்க்க

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு

நாகப்பட்டினம்: மகளிா் தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்வேறு நாடுகளில... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை, பாஜக நிா்வாகிகள் துரை செழியன்,... மேலும் பார்க்க