திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
நீா்நிலைகளில் குளிக்க வேண்டாம்: கடலூா் எஸ்பி அறிவுறுத்தல்
சிறுவா்கள் நீா்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் எனவும், சிறுவா்கள் நீா்நிலைகளில் தனியாக இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோா்கள் அனுமதிக்க கூடாது என்றும் கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளம் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீா் நிறைந்துள்ளது.
தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் நீா் நிலைகளில் இறங்கி குளிக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விடுமுறை என்பதால் சிறுவா்கள் நீா்நிலைகளில் இறங்கி விளையாடும்போது, விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
எனவே, பொதுமக்கள் நீா்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும், மேலும் தற்போது தொடா் விடுமுறை காலம் வருவதால் சிறுவா்கள் நீா்நிலைகளில் தனியாக இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோா்கள் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.