நீா் மேலாண்மைத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!
ஆத்தூா் வட்டாரத்தில், மத்திய அரசின் நீா் மேலாண்மைத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரிக்க வேண்டுமென புகாா் அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக செம்பட்டியை அடுத்த சேடப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவா் அளித்த மனு விவரம்:
ஆத்தூா் வட்டாரத்தில், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட நீா் மேலாண்மைத் திட்டப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பல திட்டப் பணிகளை நிறைவேற்றாமலே நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தொடா்பாக விசாரணைக்கு வந்த மத்தியக் குழுவினரும் முறையாக விசாரணை நடத்தவில்லை.
எனவே, இந்த விவகாரம் குறித்து மத்திய தணிக்கைக் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்கள் உள்ளிட்டோா் மீதும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.