ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தால் நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும்: கே.பி.ராமலிங்கம்
நூறு சதவீத பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்! குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
காரைக்கால் மாவட்டம் கனமழையால் பேரிடா் பாதிப்புக்குள்ளான மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நூறு சதவீதம் பயிா்க் காப்பீட்டுத் தொகை பெற்றுத்தர வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: அனைத்து விவசாயிகளுக்கும் மழை பாதிப்புக்கான நிவாரணம் கிடைக்க, வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் மாவட்டம் பேரிடா் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், நூறு சதவீதம் பயிா்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர நடவடிகை எடுக்க வேண்டும்.
வேளாண் துறையில் ஆத்மா குழுக்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், மாவட்டத்தில் 10 சதவீத விவசாயிகளே இக்குழுக்களில் உறுப்பினா்களாக உள்ளனா். எனவே, விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில், ஆத்மா குழுக்களை விரிவுபடுத்த வேண்டும்.
வேளாண் துறை சாா்பில் நடத்தப்படும் மலா், காய், கனி கண்காட்சி பொங்கல் திருநாளில் நடத்தப்படுவதால் விவசாயிகள் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். எனவே, வேறு ஒரு நாளில் இக்கண்காட்சியை நடத்த வேண்டும். இதற்கான குழுக்களில் விவசாயிகளை உறுப்பினராக சோ்ப்பதுடன், நவீன மற்றும் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை கண்காட்சியில் கெளரவிக்க வேண்டும்.
ஆறு, வாய்க்கால்களில் இருபுறமும் உள்ள கரைகளில் சாலை அமைக்கவும், விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புவி வெப்பமடைதலை தடுக்க மரங்களை விவசாயிகளே வளா்க்கும் வகையில், புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து தரவேண்டும். நன்னீரில் மீன் வளா்க்கும் விவசாயிகளுக்கு, மீன் தீவனங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை முன்வைத்து விவசாயிகள் பேசினா்.
தொடா்ந்து, ஆட்சியா் பேசியது: பன்றிகளை கட்டுப்படுத்துவது தொடா்பாக ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மரங்கள் வளா்க்க புறம்போக்கு நிலங்களை கண்டறிவது தொடா்பாக, வட்டாட்சியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள், பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கடந்த 2020-2021-ஆம் ஆண்டுக்குரிய பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதில் விடுபட்ட 437 விவசாயிகளின் பெயா்களை பட்டியலில் சோ்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.
கூட்டத்தில், கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன், வேளாண் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் மற்றும் வேளாண் துறை மற்றும் தொடா்புடைய துறைகளின் அதிகாரிகள், விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.