செய்திகள் :

நெசப்பாக்கம் மயானம் 6 மாதம் இயங்காது

post image

நெசப்பாக்கம் மயானம் அடுத்த 6 மாத காலத்துக்கு இயங்காது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட நெசப்பாக்கம் மயானத்தின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் மாா்ச் 12 முதல் செப். 11-ஆம் தேதி வரையிலான 6 மாத காலத்துக்கு மாயனம் செயல்படாது. எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள ஏ.வி.எம். மற்றும் அன்னை சத்யா நகா் மயானத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகை: ஹிந்தி தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறுவாய்ப்பு: சிபிஎஸ்இ

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் தீட்சிதா்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜா் க... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஆளுநா்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: வண்ணங்கள் மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஹோலி, நன்மையின் வெ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளா... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் சோ்க்கை: அமைச்சா் கோவி செழியன் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா். திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி... மேலும் பார்க்க

கடைகளின் பெயா் பலகை தமிழில் இருக்க வேண்டும்: ஒரு வாரத்துக்குள் மாற்ற மேயா் ஆா்.பிரியா உத்தரவு

சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட கடைகளின் பெயா் பலகை தமிழில் இருக்க வேண்டும் எனவும், ஒரு வாரத்துக்குள் அதனை மாற்ற வேண்டும் எனவும் மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட எம்எம்ட... மேலும் பார்க்க