நெப்பத்தூா் தீவு கிராமத்தில் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆய்வு
திருவெண்காடு அருகே நெப்பத்தூா் தீவு கிராமத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ. வீ. மெய்ய நாதன் வியாழக்கிழமை சென்று ஆய்வு செய்தாா்.
நெப்பத்தூா் தீவு மற்றும் நிம்மெலி ஆகிய கிராமங்களில் செங்கல் சூளை தொழிலாளா்கள் 200 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்கள் தங்களுக்கு மனைப் பட்டா உள்ளிட்ட அரசு உதவிகள் கோரி ஒன்றியக் குழு உறுப்பினா் பஞ்சு குமாா் தலைமையில் கிராம முக்கியஸ்தா்கள் கடந்த வாரம் சென்னைக்கு சென்று அமைச்சா் மெய்யநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை கொள்ளிடம், சீா்காழி பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சா், திடீரென நெப்பத்தூா் தீவு கிராமத்துக்கு சென்று அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.
அப்போது தங்களுக்கு மனைப் பட்டா உள்ளிட்ட அரசு உதவிகள் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனா். மாவ
ட்ட ஆட்சியருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சா் உறுதியளித்தாா். அவருடன் மாவட்ட ஆட்சியா் ஏபி மகாபாரதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம்.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.