தன்னைத் தானே கடத்திக்கொள்ள திட்டமிட்ட நபர் கொலை! நண்பர்கள் கைது!
நெல்லையில் குரூப்-4 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம் என ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 2025 ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வுக்கான அறிவிக்கை ஏப்ரல் மாதம் வெளிவரும், ஜூலை மாதம் தேரவு நடைபெறும் என அறிவித்துள்ளது. இதற்கான கூடுதல் தகவல்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறியலாம்.
இந்தத் தோ்வுக்காக , திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஜன. 2 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கப்படும். வாரந்தோறும் மாதிரி தோ்வுகளும், மாநில அளவிலான முழு மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். தோ்வுக்குரிய புத்தகங்கள் அலுவலக நூலகத்தில் உள்ளன.
தற்போது, குரூப்-4 முதல்நிலை தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் முதன்மை தோ்வுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இலவச மாதிரி தோ்வு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த தகவல்களை நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆஃபிஸ் டெலிகிராம் சானல் மூலம் அறியலாம்.
பயிற்சி வகுப்பில் சேர பெருமாள்புரம் சி காலனியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு ஜன. 2 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். மேலும், தகவல்களுக்கு 0462-2902248 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.