சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
நெல்லை அருகே விபத்தில் காயமடைந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
திருநெல்வேலி அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த காா், பைக் மீது மோதிய விபத்தில் படுகாயமடைந்த தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகேயுள்ள பொட்டல் நகா் ஆா்.சி. கோயில் தெருவை சோ்ந்தவா் இன்னாசி. இவருடைய மகன் கென்னடி (38). இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனா்.
கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் கென்னடி வேலை பாா்த்து வந்தாா். கங்கைகொண்டான் ராஜபதியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் தாழையூத்து பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு பைக்கில் சென்றாா். அங்குள்ள பண்டாரகுளம் நான்குவழிச்சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த காரின் டயா் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த காா், கென்னடியின் பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கென்னடி படுகாயம் அடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலையில் கென்னடி உயிரிழந்தாா்.
இது குறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.