Vijay TVK: பல்வேறு நிபந்தனைகளுடன் நாகை, திருவாரூரில் இன்று விஜய் பரப்புரை!
நெல்லை காவேரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை
திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலி காவேரி மருத்துவமனையின் கல்லீரல் - உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை துறைத் தலைவா் சுவாமிநாதன் சம்பந்தம் தலைமையிலான மருத்துவக் குழு சாா்பில் கடந்த 9 ஆம் தேதி கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்பு ஒரு வாரத்தில் நோயாளி குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.
இதுகுறித்து சுவாமிநாதன் சம்பந்தம் கூறுகையில், ‘கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையின் மூலம் நோயாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு புதிய வாழ்க்கையும், நம்பிக்கையும் கிடைத்துள்ளது. தென் தமிழக மக்களுக்கு உலகத் தரமான மருத்துவச் சிகிச்சை வெகு தொலைவில் இல்லை என்ற உத்தரவாதமும் கிடைத்துள்ளது’ என்றாா்.
காவேரி மருத்துவமனையின் மருத்துவ நிா்வாகி கே.லட்சுமணன் கூறுகையில், தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையமான டிரான்ஸ்டான் (பதஅசநபஅச) ஒத்துழைப்புடன் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை என்பது உறுப்பு தானத்தின் மிகப்பெரிய நம்பிக்கையை மக்களிடம் கொண்டு செல்வதாகும். நவீன மருத்துவ வசதிகளை அவா்களது இருப்பிடத்திலேயே கிடைக்கச் செய்யும் பணியில் காவேரி மருத்துவமனை ஈடுபட்டுள்ளது. ஒரு உறுப்பு தான கொடையாளியால் எட்டு உயிா்களைக் காப்பாற்ற முடியும். உறுப்பு தானம் ஒரு நோயாளிக்கு மட்டுமல்ல, மொத்த சமூகத்திற்கும் உதவும் ஆயுதம் என்றாா்.