செய்திகள் :

நெல்லை: திருடிய நகையை மீண்டும் வீட்டில் வைத்த திருடன்.. என்ன காரணம்?

post image

வீட்டிலிருந்து திருடிச் சென்ற நகையை மீண்டும் அதே வீட்டுக்குள் திருடன் வைத்து சென்ற ஆச்சர்ய சம்பவம் ஆண்டுதோறும் எதோவொரு மாவட்டத்தில் நடந்துகொண்டேதான் இதுக்கிறது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ரம்மதபுரத்தைச் சேர்ந்த ரீகன் (40) செல்போன் கடை நடத்திவருபவர். இவரது வீட்டில் சீரமைப்புப் பணி நடைபெற்றுவருவதால் வேலையாட்கள் அடிக்கடி வந்துபோவதுமாக இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று திடீரென அவரது வீட்டில் 6 1/2 பவுன் தங்க நகை காணாமல் போன சம்பவம் நடந்திருக்கிறது.

திருடன்

இதையறிந்த உடனே ரீகன், காவல்துறையில் புகாரளித்திருக்கிறார். இதில் ட்விஸ்ட் என்னவென்றால், அடுத்த சில மணிநேரங்களில் திருட்டப்பட்ட நகை ரீகன் வீட்டின் மேசையில் வைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையில் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் திருடன் திருடிய நகைகளை எடுத்த இடத்திலே வைத்துச் சென்றிருக்கிறார். நகைக்கிடைத்தாலும் இந்த நகையை எடுத்தது வீட்டில் இருப்பவர்களா அல்லது வெளியிலிருந்து யார் திருட்டியிருப்பார்கள் என்று கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்று வருகிறது.

"ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம்; ஒன்றிய அரசுகூட கேட்டது, ஆனால், தமிழ்நாடு அரசு..!" - திருமா

நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கவின் ஆணவப்படுகொலை தொடர்பாக பேசியிருக்கும் விசிக தலைவர் திருமாவளவன்... மேலும் பார்க்க

TVK: "விஜய் நினைப்பதை போல் இல்லை... அரசியல் களம் மாறிவிட்டது" - திருமாவளவன்

சமீபத்தில் த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை அறிமுகம் செய்த விஜய், "1967 மற்றும் 1977 ஆகிய அந்த இரண்டு மாபெரும் தேர்தல்களில் ஏற்கெனவே தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருந்த அதிகார பலம், அசுர பலம... மேலும் பார்க்க

சென்னை: 12.80 லட்சம் பயணிகள் பயணம்; ரூ.90 லட்சம் சேமிப்பு-லாபம் தரும் மின்சார பேருந்துகள்

சென்​னை​யில் மின்சா​ரப் பேருந்​துகள் மூலம் எரிபொருள் செலவு ரூ.90 லட்​சம் சேமிக்​கப்​பட்​டிருக்கிறது. கடந்த மாதம் 30 ஆம் தேதி சென்னையில் 120 மின்​சா​ரப் பேருந்​துகளின் சேவையை முதல்​கட்​ட​மாக முதலைச்சர்... மேலும் பார்க்க

BJP: 'வெளியான பாஜக நிர்வாகிகள் பட்டியல்' - கைவிடப்பட்டாரா விஜயதரணி?

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அதில் நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் மாநிலத் துணைத் தலைவர்களாகவும், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 15 ப... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: "சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதற்கு அதிமுக-வின் அழுத்தம்தான் காரணம்"- இபிஎஸ்

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சட்டவிரோத காவலில் கொலை செய்யப்பட்ட மடப்புரம் அஜித்குமார் வீட்டுக்கு இன்று (ஜூலை 30) சென... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்!' - சென்னையில் பெரு தூதர்

தென் அமெரிக்க நாடான பெரு தன் 204-வது விடுதலை நாளை கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் பெரு நாட்டின் சுதந்திர தினம் சென்னையிலும் கொண்டாடப்பட்டது.சுரங்கம், ஆட்டோமொபைல், தகவல் தொடர்பு துறை, விவசாயம் ஆகிய த... மேலும் பார்க்க