செய்திகள் :

அஜித்குமார் கொலை வழக்கு: "சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதற்கு அதிமுக-வின் அழுத்தம்தான் காரணம்"- இபிஎஸ்

post image

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சட்டவிரோத காவலில் கொலை செய்யப்பட்ட மடப்புரம் அஜித்குமார் வீட்டுக்கு இன்று (ஜூலை 30) சென்று அஞ்சலி செலுத்தி அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அஜித்குமார் கொலை சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று சந்திக்காமல், போனில் அழைத்துப் பேசியிருக்கிறார் என்றும் அஜித்குமாரின் சகோதரருக்குச் சரியான அரசுப் பணி கொடுக்கவில்லை என்றும் விமர்சித்துப் பேசியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், எடப்பாடியே நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கவில்லை என திமுகவினர் பதிலுக்கு விமர்சித்து வந்தனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, இன்று (ஜூலை 30) சிவகங்கை மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.

காலையே சட்டவிரோத காவலில் கொலை செய்யப்பட்ட மடப்புரம் அஜித்குமார் வீட்டுக்குச் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். மேலும், அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் அஜித்குமாரின் சகோதரருக்கு, அவர் விரும்பிய இடத்தில் அரசுப் பணி வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, "அஜித்குமார் கொலை சம்பவத்தில் அதிமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதிமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இந்த வழக்கில் காவல்துறையினர் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டனர்." என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

BJP: 'வெளியான பாஜக நிர்வாகிகள் பட்டியல்' - கைவிடப்பட்டாரா விஜயதரணி?

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அதில் நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் மாநிலத் துணைத் தலைவர்களாகவும், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 15 ப... மேலும் பார்க்க

நெல்லை: திருடிய நகையை மீண்டும் வீட்டில் வைத்த திருடன்.. என்ன காரணம்?

வீட்டிலிருந்து திருடிச் சென்ற நகையை மீண்டும் அதே வீட்டுக்குள் திருடன் வைத்து சென்ற ஆச்சர்ய சம்பவம்ஆண்டுதோறும் எதோவொரு மாவட்டத்தில் நடந்துகொண்டேதான் இதுக்கிறது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ரம்மதப... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்!' - சென்னையில் பெரு தூதர்

தென் அமெரிக்க நாடான பெரு தன் 204-வது விடுதலை நாளை கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் பெரு நாட்டின் சுதந்திர தினம் சென்னையிலும் கொண்டாடப்பட்டது.சுரங்கம், ஆட்டோமொபைல், தகவல் தொடர்பு துறை, விவசாயம் ஆகிய த... மேலும் பார்க்க

`இதில் அரசியல் இல்லை..!’ - பிரதமர் மோடி நிகழ்சியில் திருமாவளவன் பங்கேற்றது குறித்து வன்னிஅரசு

இரண்டுநாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்த மோடி, சனிக்கிழமை துத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்தார். நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழனின் ப... மேலும் பார்க்க

Top News : பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட் டு முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் | ஜூலை 27 ரவுண்ட்அப்

இன்றைய நாளின் (ஜூலை 27) முக்கியச் செய்திகள்!பீகாரில் ஊர்க்காவல் படை தேர்வில் கலந்துக்கொண்டப் பெண் ஒருவர் மயங்கிய நிலையில், அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது கூட்டு பாலியல் வன்கொடு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்! - Event Coverage Album

பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்.! மேலும் பார்க்க