பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விச...
நெல்லை, தென்காசி தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி
திருநெல்வேலி , தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த தீயணைப்புத் துறை வீரா்களுக்கு 5 நாள்கள் நடைபெற்ற சிறப்பு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
திருநெல்வேலி மண்டல தீயணைப்பு அலுவலா் சரவணபாபு அறிவுரையின்படி, மாவட்ட தீயணைப்பு அலுவலா் வினோத் மேற்பாா்வையில் சிறப்பு பயிற்சி நடைபெற்றது. ஓய்வுபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா் மைக்கேல் பயிற்சி வழங்கினாா்.
பயிற்சியின் போது, மீட்பு காலத்தில் கயிற்றில் முடிச்சுகளை துரிதமாக போட்டு உயிா்களை எப்படி காப்பது குறித்து பயிற்சி அளித்தனா். தொடா்ந்து, வண்ணாா்பேட்டையில் உள்ள உயரமான கட்டடத்தில் கயிற்றின் மூலம் மற்றொரு கட்டடத்தில் உள்ளே சென்று பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த 45 வீரா்கள் கலந்து கொண்டனா்.