சேலம்: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர், புரோக்கர் க...
நெல்லை புதிய பேருந்து நிலைய கடையில் தீ விபத்து
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சாத்தான்குளம் பேருந்துகள் நிற்கும் நடைமேடையில் உள்ள டீ கடையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் திடீரென சிலிண்டா் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இதில் கடையில் இருந்த பொருள்கள் எரிந்தன. தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இதில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சுமாா் ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
மாநகராட்சி நடவடிக்கை: இந்நிலையில் தீ விபத்து நிகழ்ந்த கடைக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மேலப்பாளையம் மண்டலத்திற்கு உள்பட்ட எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் உள்ள கடை எண்-59 இல் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பராமரிப்பின்றி கடையை நடத்தி தீ விபத்து ஏற்பட காரணமாக இருந்ததால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.
ற்ஸ்ப்12ச்ண்ழ்ங்
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் டீ கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.