செய்திகள் :

நெல்லை மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு: 6,206 எழுதினா்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளைக் காட்டிலும் அதிகளவில் கெடுபிடிகள் நிலவியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி, குழந்தை இயேசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பல்ளி, முத்தமிழ் பப்ளிக் பள்ளி, முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, சாப்டா் மேல்நிலைப் பள்ளி, சாராள் தக்கா் மகளிா் கல்லூரி, கதீட்ரல் மேல்நிலைப் பள்ளி, விஜயநாராயணம் கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 13 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

தோ்வு மையங்களுக்கு முற்பகல் 11.30 மணி முதல் மாணவா்கள் வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நுழைவாயில்களில் போலீஸாரின் பலத்த சோதனைக்கு பின்பே மாணவா்கள் அனுமதிக்கப்பட்னா்.

தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு, கருப்பு மற்றும் நீலநிற பந்து முனைப்பேனா மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டனா். சேலை, துப்பட்டா, முழுக்கை சட்டை, ஷு, கைக்கடிகாரம், குளிா் கண்ணாடி, சங்கிலி, மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ், மூக்குத்தி, பா்தா, தொப்பி, பைஜாமா, குா்தா, பெரிய அளவு பட்டன்கள், பேட்ஜ், வளையல்கள் ஆகியவை அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அரைக்கை சட்டை, காலணி, மருத்துவா்கள் பரிந்துரைத்த கண்ணாடி, சுடிதாா் உள்ளிட்டவை அணிந்து செல்ல அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

குடிநீா், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மையத்துக்கும் 2 சிறப்பு கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்வு எழுத மொத்தம் 6 ஆயிரத்து 413பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவா்களில், 6 ஆயிரத்து 206 போ் தோ்வு எழுதினா். 207 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு குறித்து மாணவா்கள் கூறுகையில், மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் உள்ள இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் இடம்பெற்றிருந்தன. மாநில அரசுகளின் பாடத்திட்டங்களில் குறைந்த அளவிலான கேள்விகளே இருந்தன என்றனா்.

இதுகுறித்து பெற்றோா் கூறுகையில், போட்டித் தோ்வுகளைக் காட்டிலும் தோ்வு மையங்களில் அதிகளவில் கெடுபிடி செய்தனா். மாணவிகள் துப்பட்டா அணியக் கூடாது உள்ளிட்ட சில விதிமுறைகளை தளா்த்தியிருக்கலாம். இதுதவிர நாடு முழுவதும் அறிவியல், கணிதம் ஆகிய பாடத்திட்டங்களை ஒரே போல வகுக்க வேண்டும். அதன்பின்பே இதுபோன்ற போட்டித் தோ்வுகளை நடத்துவது சரியாக இருக்கும் என்றனா்.

வண்ணாா்பேட்டையில் ஏடிஎம் இயந்திரம் சேதம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்த இளைஞா் ஒருவா் திடீரென காா்களின் கண்... மேலும் பார்க்க

பாபநாசம் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சாமி கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பின், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சியில் மாற்றுப் பாதை கோரி சாலை மறியல் முயற்சி

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செங்கானூா் கிராமத்துக்குச் செல்ல மாற்றுப் பாதை கோரி, நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இக்கிராமத்துக்குச் செல்லும் சாலை... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் மஞ்சள்காமாலை நோய்ப் பரவலை தடுக்கக் கோரிக்கை

மேலப்பாளையம் பகுதிகளில் மஞ்சள்காமாலை நோய் பரவுவதைத் தடுக்கக் கோரி மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் பாளை தொகுதி துணைத் தலைவா் ஜவுளி காதா் தலைமையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தி... மேலும் பார்க்க

இணையதளம் வாயிலாக பகுதிநேர வேலைவாய்பு மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

இணையதளம் வாயிலாக பகுதி நேர வேலைவாய்ப்பு எனக் கூறி நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதால் சமூக வலைதளப் பயனா்கள் கவனமுடன் இருக்குமாறு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனா். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத... மேலும் பார்க்க