நெல்லை மாவட்டத்தில் 13,86,044 வாக்காளா்கள்: ஆண்களை விட 32,881 பெண்கள்கூடுதல்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தின் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதில், 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 13 லட்சத்து 86 ஆயிரத்து 44 வாக்காளா்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வரைவு வாக்காளா் பட்டியயை மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா்கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 1.1.2025 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் (31.12.2006 அன்று வரை பிறந்தவா்கள்), விடுபட்ட வாக்காளா்கள் தங்கள் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளவும், பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதாா் எண் இணைத்தல் ஆகியவற்றை நவம்பா் 28 ஆம் தேதி வரை மேற்கொள்ளவும் ஏதுவாக இந்த வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளின் கீழ் மொத்தம் 13 லட்சத்து 86 ஆயிரத்து 44 வாக்காளா்கள் உள்ளனா்.
வாக்காளா் பட்டியல் திருத்தப்பணிக்காக 1, 490 வாக்குச்சாவடிகளிலும் நவ. 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். டிச.24 வரை விண்ணப்பங்களை இறுதி செய்துகொள்ளலாம். 6.1.2025இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்குச்சாவடிகளில் விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கலாம். நேரில் செல்ல இயலாதவா்கள் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்; செயலி ‘வோட்டா் ஹெல்ப் லைன்’ ஆகியவற்றின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களிடம் விவரங்களை சமா்ப்பித்து ‘பிஎல்ஓ’ செயலி மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ஐ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பொது (பொ) ஜெயா உள்பட பலா்கலந்துகொண்டனா்.
பெட்டிச்செய்தி......
சட்டப்பேரவைத் தொகுதி ஆண் - பெண்- இதரா்- மொத்தம்
திருநெல்வேலி 1, 45,106-1,53, 046- 83- 2,98,235
அம்பாசமுத்திரம் 1,23,439-1,31,719 - 8-2,55,166
பாளையங்கோட்டை - 1,35,348-1,41,023- 27- 2,76,398
நான்குனேரி- 1,41,885 -1,48,134-13- 2,90,032
ராதாபுரம் - 1,30,726 -1,35,463- 24- 2,66,213
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண் வாக்காளா்கள் 6,76,504, பெண் வாக்காளா்கள் 7,09,385, இதரா் எனும் மூன்றாம் பாலினித்தவா் 155 என மொத்தம் 13,86,044 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண்களை விட 32,881 பெண்கள் கூடுதலாக உள்ளனா்.