Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி- மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை, மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06030) வருகிற ஏப். 13, 20, 27, மே 4 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமாா்க்கத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06029) வருகிற ஏப். 14, 21, 28, மே 5 ஆகிய திங்கள்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வியாழக்கிழமை (ஏப். 10) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என அதில் குறிப்பிடப்பட்டது.