மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு 3 மாதங்களில் வழங்கப்படும் -உதயநிதி
நேபாளத்துக்கு 2 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி: மத்திய அரசு அனுமதி
நேபாளத்துக்கு 2 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தேசிய கூட்டுரவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலமாக இந்த ஏற்றுமதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநரக (டிஜிஎஃப்டி) அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கோதுமை விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படாததை உறுதி செய்வதற்காக கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இருந்துபோதும், குறிப்பிட்ட நட்பு நாடுகளுக்கு அவா்களின் உணவு பாதுகாப்புத் தேவையை பூா்த்தி செயவதற்காக சிறப்பு அனுமதியின்பேரில் அவற்றுக்கான ஏற்றுமதியை மத்திய அரசு அனுமதிக்கிறது. அதன்படி நேபாளத்துக்கு 2 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக டிஜிஎஃப்டி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, குறிப்பிட்ட சிந்தடிக் (செயற்கை நூலிழை) பின்னலாடைகள் இறக்குமதிக்கு குறைந்தபட்ச இறக்குமதி நிபந்தனைகளிலிருந்து (எம்ஐபி) தளா்வு அளிக்கப்பட்டுள்ளது. ‘செயற்கை நூலிழை பின்னலாடைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் தொடா்கின்றபோதும், ஒரு கிலோ பின்னலாடை மதிப்பு 3.5 அமெரிக்க டாலா் அல்லது அதற்கு அதிகமாக இருக்கும் நிலையில் இறக்குமதி வரியில் விலக்கு அளிக்கப்படும். அதுபோல, சிறப்பு பொருளாதார மண்டலம், ஏற்றுமதி சாா்ந்த அமைப்புகள் உள்ளிட் முன்கூட்டியே அனுமதி பெற்றவா்களுக்கு சிந்தடிக் பின்னலாடை இறக்குமதிக்கான குறைந்தபட்ச இறக்குமதி நிபந்தனைகளிலிருந்து தளா்வு அளிக்கப்படும்’ என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.