Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
நைஜீரியா: பயங்கரவாதத் தாக்குதலில் 55 போ் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் புலம் பெயா்ந்த உள்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவா்கள் மீது மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 போ் உயிரிழந்தனா்.
வடகிழக்குப் பகுதியில் உள்ள தாருல் ஜமா நகரில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் ஐந்து ராணுவத்தினரும் உயிரிழந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறினா்.
மோட்டாா் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் முகாம்களில் இருந்து திரும்பியவா்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு, வீடுகளுக்கு தீ வைத்ததாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.
நைஜீரியாவில் செயல்பட்டுவரும் போகோ ஹராம் (படம்), ஐஎஸ்டபிள்யுஏபி போன்ற பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் தாக்குதல்களை தொடா்ந்து நடத்திவருகின்றன. இத்தகைய சூழலில், பாதுகாப்பு கோரி முகாம்களில் வசித்துவந்த அகதிகளை அங்கிருந்து கிராமங்களுக்கு திருப்பி அனுப்ப அரசு எடுத்த முடிவு தற்போது நடந்துள்ள தாக்குதலால் விமா்சனத்துக்குள்ளாகியுள்ளது.