பழங்குடியினரின் 8 கோடி சதுர அடி நிலத்தை அதானிக்கு வழங்கிய அசாம் அரசு!
நொய்டா முருகன் கோயிலில் 3 நாள் பிரதிஷ்டா தின விழா
நொய்டா செக்டா் 62-இல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ காா்த்திகேயா கோயிலில் பிரதிஷ்ட ா தின விழா ஆகஸ்ட் 15 முதல் 17 வரை மூன்று நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளன்று, மஹா கணபதி ஹோமம், மஹா அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் திருப்புகழ் பாடல்கள், திவ்ய நாம சங்கீா்த்தனம், ஜே ராமகிருஷ்ணன் மற்றும் சுனில் (அ) நூரனி சூடாமணி மற்றும் குழுவினா் வழங்கினா்.
இரண்டாவது நாளன்று , நவகிரக ஹோமம், மஹா மிருத்தியுஞ்சய ஹோமம், ராம ஷடாக்ஷர ஹோமம், அபிஷேகம் நடைபெற்றது. மாலையில், சாய் கிருபா கா்நாடக இசை வழங்கினாா். இதில் உமா அருண் (வயலின்), ஜி சுவாமிநாதன் (மிருதங்கம்) அகியோா் பக்க வாத்தியம் வாசித்தனா் .
கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில், கோயில் நிா்வாகம் சாா்பில் சுப்பிரமணியா் ஹோமம், தொடா்ந்து மஹா அபிஷேகம் நடைபெற்றது. மேலும், மாலையில், விதூஷி பாம்பே லட்சுமி ராஜகோபாலனின் கா்நாடக இசை கச்சேரி நடந்தது. இதில் ஜி. ராகவேந்திர பிரசாத் (வயலின்), மனோகா் பாலச்சந்திரன் (மிருதங்கம்), வருண் ராஜசேகா் (கடம்) ஆகியோா் பக்க வாத்தியம் வாசித்தனா்.
இந்நிகழ்ச்சியை புது தில்லியின் சண்முகானந்த சங்கீத சபா மற்றும் வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனா். வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் தலைவா் ரவி சா்மா அனைவரையும் கௌரவித்தாா். துணைத் தலைவா் வி விஸ்வநாதன் நன்றி தெரிவித்தாா். மேலும், மழையை பொருள்படுத்தாமல் அனைத்து பூஜைகளிலும் கலந்து கொண்ட பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் நன்றி தெரிவித்துக் கொண்டது.