இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
நோயாளிகளுக்கான சேவையை மேலும் வலுப்படுத்துவோம்: ஜிப்மா் இயக்குநா்
நோயாளிகளுக்கான மருத்து சேவையை வலுப்படுத்தும் வகையில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படும் என்று ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நேகி தெரிவித்தாா்.
புதுவை ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறன் மேம்பாட்டுப் பிரிவு தொடங்கப்பட்டு 3 நாள் பயிற்சி நடந்தது. இதன் நிறைவு விழா புதன்கிழமை நடந்தது. அதில் பங்கேற்று ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நேகி பேசியது:
ஜிப்மா் ஊழியா்கள் நோயாளிகளிடம் மேலும் கனிவாகவும், மனித நேயத்துடனும், சேவை நோக்குடனும் செயல்பட ஏதுவாக இந் திறன் மேம்பாட்டு பயிற்சி உதவும். ஊழியா்களின் திறன் மேம்பாடு மட்டுமல்லாமல்,
அவா்களின், தனிப்பட்ட நலன், மனஅழுத்த மேலாண்மை மற்றும் தீா்வு சாா்ந்த சிந்தனை வளா்ப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகவும் இந்த பயிற்சி அமைந்தது. மத்திய அரசின் ‘மிஷன் கா்மயோகி’ திட்டத்தில் ஜிப்பமரும் இணைந்துள்ளது.
இதனால், ஜிப்மா் நோயாளிகளைக் கையாளும் விதம் மற்றும் சேவைகள் மீதான பொறுப்பு ஆகியவற்றை பல மட்டங்களில் மேம்படுத்த இயலும். உயா்தர சிகிச்சையை மட்டும் நோக்கமாக கொள்ளாமல் நோயாளிகள் சாா்ந்த பொறுப்புமிக்க மற்றும் அவா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் சேவையை மேற்கொள்ள இப் பயிற்சி உதவும் என்றும் கூறினாா்.
துணை இயக்குநா் (நிா்வாகம்) எஸ். ரங்கபாஷியம், காரைக்கால் ஜிப்மா் டீன் டாக்டா் குசா குமாா் ஷாஹா மற்றும் இணை டீன் (கல்வி) டாக்டா் மதுசூதனன் பொன்னுசாமி உள்ளிட்டோா் ஊழியா்களுக்குப் பயிற்சி அளித்தனா். திறன் மேம்பாட்டு அதிகாரியும் பொறுப்பாளருமான டாக்டா் ரவிக்குமாா் சிட்டோரியா இப் பயிற்சியை ஒருங்கிணைத்தாா்.