பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி
பகலிரவு டெஸ்ட்: 209 ரன்கள் பின்னிலையில் மேற்கிந்தியத் தீவுகள்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஜமைக்காவில் பகலிரவு ஆட்டமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டி காலை 7.30 மணி வரை நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸில் 70.3 ஓவர்களில் ஆஸி. அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 48, கேமரூன் கிரீன் 46 ரன்களும் எடுத்தார்கள்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஷமர் ஜோசப் 4, ஜெய்டேன் சீல்ஸ், ஜஸ்டின் கிரீவிஸ் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.
முதல்நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 ஓவர்களில் 16 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்தது.
மிட்செல்ஸ் ஸ்டார்க் கெவ்லோன் ஆண்டர்சனை 3 ரன்களுக்கு வீழ்த்தினார்.
தற்போது, களத்தில் பிரண்டன் கிங், கேப்டன் ரஷ்டன் சேஸ் இருக்கிறார்கள்.