மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்...
பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம்: ஒரே மாதத்தில் 11.3 லட்சம் பேர் இணைந்தனர்!
மும்பை: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கடந்த பிப்ரவரியில் பங்குச்சந்தையில் புதிதாக 11.3 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தேசிய பங்குச்சந்தைக் குறியீடு(என். எஸ். இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி நிலவரப்படி, பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 11.2 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பங்குதாரர்களாக பதிவாகியுள்ள கணக்குகளின் எண்ணிக்கை 21.9 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில், பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9 கோடியாக உயர்ந்திருந்த நிலையில், அதற்கடுத்த ஐந்தே மாதங்களில், அதாவது ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டில், பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதே இந்த உயர்வுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.