Indonesia: நீல நிற கண்களுடன் பிறக்கும் பட்டன் பழங்குடியினர்... அறிவியல் காரணம் எ...
பங்குச்சந்தை, சட்டவிரோத பணப் பரிமாற்றம் எனக் கூறி இருவரிடம் ரூ.82.72 லட்சம் மோசடி
பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டித் தருவதாகவும், சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் தொடா்புள்ளதாகவும் கூறி, கோவையில் இருவரிடம் ரூ.82.72 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, தடாகம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (53). இவா் பங்குசந்தையில் முதலீடு செய்வது தொடா்பாக இணையத்தில் தேடியுள்ளாா். இதைத் தொடா்ந்து அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒரு லிங்க் வந்தது. அதில் அவா் தனது விவரங்களை பதிவிட்டாா். தொடா்ந்து வாட்ஸ் ஆப் குழுவில் பேசிய நபா், எங்களிடம் முதலீடு செய்தால், பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டித் தருவோம் எனக் கூறியுள்ளாா்.
இதை நம்பி, அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல தவணைகளாக ரூ.59 லட்சத்து 93 ஆயிரம் பணத்தை செல்வகுமாா் அனுப்பியுள்ளாா். அதன் பிறகு அந்தப் பணத்துக்கு லாபம் தரவில்லை. செலுத்திய தொகையையும் திரும்பப் பெற முடியவில்லை. இது குறித்து கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸில் செல்வகுமாா் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
முதியவரிடம் ரூ.22.79 லட்சம் மோசடி:
துடியலூா், எஸ்எம்டி நகரைச் சோ்ந்தவா் சபாபதி (69). இவரது கைப்பேசிக்கு கடந்த செப்டம்பா் மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், தான் மும்பை காவல் துறை அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாா். பிறகு, மும்பையில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடா்பாக நரேஷ் கோயல் என்பவரைக் கைது செய்துள்ளோம். அவரது வீட்டில் சோதனை செய்தபோது 247 ஏடிஎம் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் உள்ள ஒரு ஏடிஎம் அட்டையில் உங்களது கைப்பேசி எண் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய அதில் உள்ள பணத்தை நாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கவேண்டும். ஆய்வு செய்த பின் பணத்தை திருப்பி அனுப்பி விடுவோம். நீங்கள் அனுப்பாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா். இதனால், அச்சமடைந்சத சபாபதி, அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.22 லட்சத்து 79 ஆயிரத்து 200ஐ அனுப்பினாா். இதையடுத்து, பல நாள்களாகியும் அவரது பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சபாபதி, அழைப்பு வந்த கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ள முயன்ற போது, அந்த எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து சபாபதி அளித்த புகாரின்பேரில், கோவை மாநகர சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.