சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 ரன்கள் இலக்கு!
பங்குச் சந்தை கடும் சரிவு! 1,000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!
பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,323.05 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் பிற்பகல் 12.55 மணி நிலவரப்படி 1,000.85 புள்ளிகள் குறைந்து 80,598.64 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 292.85 புள்ளிகள் குறைந்து 24,520.60 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
துறைகளைப் பொருத்தவரை நிஃப்டி ஆட்டோ, ஐடி துறைகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன.
சென்செக்ஸில் பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் மட்டுமே ஏற்றம் கண்ட நிலையில், எம்&எம், பவர் கிரிட், டெக் மஹிந்திரா, ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், ஆர்ஐஎல், ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்கள் கடும் இழப்பைச் சந்தித்துள்ளன.
இதனால் முதலீட்டாளர்களுக்கு இன்று பல லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
இதையும் படிக்க | டாஸ்மாக் முறைகேடு புகார்: அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை!