வெளிநாடுகளில் பிச்சையெடுத்த 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நாடுகடத்தல்!
பஞ்சாப் எல்லையில் 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு!
போர்ப் பதற்றம் காரணமாக எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், ஆறு நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்ப் பதற்றம் நிலவி வந்த நிலையில், பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள ஐந்து பஞ்சாப் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மே 8 அன்று மாநில அரசுக் கல்வி நிறுவனங்களை மூன்று நாள்களுக்கு மூட உத்தரவிட்டது.
பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டாலும் எல்லையிலுள்ள ஆறு மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பஞ்சாப் பாகிஸ்தானுடன் 553 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அமிர்தசரஸ், டர்ன் தரன், பதான்கோட், ஃபாசில்கா, ஃபெரோஸ்பூர், குருதாஸ்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.
குருதாஸ்பூரில் உள்ள பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மற்ற ஐந்து எல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் புதன்கிழமையான இன்று திறக்கப்பட்டன.
அரசு வழிகாட்டுதல்களின்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதாக அமிர்தசரஸில் உள்ள அட்டாரியில் உள்ள ஸ்ரீ குரு ஹர்க்ரிஷன் பொதுப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
பதான்கோட்டில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில் மாணவர் வருகை 80 சதவீதமாக இருந்ததாகவும், அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று ஆசிரியர் கூறினார்.
பஞ்சாபில் எல்லைப் பகுதிகளில் நிலைமை இயல்பானதைத் தொடர்ந்து சந்தைகளில் வழக்கம்போல் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டன.
நான்கு நாள்கள் எல்லை தாண்டிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் மே 10 அன்று ஒரு உடன்பாட்டை எட்டின என்பது குறிப்பிடத்தக்கது.