பஞ்சாப், ஹரியாணாவில் வதைக்கும் கடும் குளிர்: மக்கள் அவதி!
பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் பல பகுதிகளில் அதிகப்படியான குளிர் நிலவி வருவதையடுத்து அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது..
தொடர்ந்து இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரான சண்டீகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.7 டிகிரி பதிவாகியுள்ளது. பஞ்சாபில், பதன்கோட்டில் கடுமையான குளிர் நிலவுகிறது, குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
பதிண்டா மற்றும் குர்தாஸ்பூரில் 4.6 டிகிரி செல்சியஸ் மற்றும் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அமிர்தசரஸில் குறைந்தபட்சமாக 6.4 டிகிரியும், லூதியானாவில் 5.7 டிகிரியும், பாட்டியாலாவில் 6.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஹரியாணாவில், சிர்சா மிகவும் குளிர் நிலவியது. குறைந்தபட்சமாக 4.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஹிசார் 5.6 டிகிரி வெப்பநிலையுடன் நேற்றிரவு அதிகப்படியான குளிர் காணப்பட்டது. அதேநேரத்தில் கர்னால் 6.8 டிகிரி செல்சியஸ் பதிவானதால் அங்குள்ள மக்கள் வெளியே வரமுடியாமல் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
அதிகப்படியான குளிர் காரணமாக வாகன ஓட்டிகள் குறித்த நேரத்திற்குச் செல்லமுடியாமல் தவிர்த்து வருகின்றனர், பெரும்பாலான மக்கள் போர்வைக்குள் ஒளிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.