படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்கள்: கேங்கர்ஸ் படக்குழு வெளியிட்ட விடியோ!
கேங்கர்ஸ் படக்குழு படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்களை ஸ்பாட்லைட் எனும் விடியோவாக வெளியிட்டுள்ளது.
மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.
முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக சுந்தர். சி, நாயகியாக கேத்ரீன் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் இன்றுமுதல் (ஏப்.24) திரையில் வெளியானது. நல்ல வரவேற்பைப் பெறும் படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி 2 நாள்களில் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.
கேத்ரின் தெரசாவின் கவர்ச்சி நடனமும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்களை ஸ்பாட்லைட் எனும் விடியோவாக வெளியிட்டுள்ளது.