படை தலைவன் ஓடிடி தேதி!
நடிகர் சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை யு. அன்பு எழுதி இயக்கினார்.
திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், இப்படம் இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் டெண்ட்கொட்டா ஓடிடியில் வருகிற ஜூலை 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஓடிடி வணிகம் முடிவடையாததால் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க: 7ஜி ரெயின்போ காலனி - 2 டீசர் அப்டேட்!
shanmuga pandian's padai thalaivan ott date announced