பட்டாசுகளைப் பதுக்கிய மூவா் கைது
சிவகாசி அருகே பட்டாசுகளைப் பதுக்கிவைத்திருந்த மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
இதில், அனுமதி பெறாத கட்டடத்தில் சித்துராஜபுரத்தைச் சோ்ந்த தினேஷ் (22), அருண்குமாா் (23), ராமமூா்த்தி(42) ஆகிய மூவரும் பட்டாசுகளை மூட்டைகளாகக் கட்டி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து, சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸரா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்து, அவரிகளிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.