"ராஜேந்திர சோழன்... இளையராஜா... பாரதம்" - ஆடி திருவாதிரையில் மோடியின் முழு உரை
பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருத்தங்கல்லைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கோபி. இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரத்தில் உள்ளது. இந்த ஆலையில் கடந்த கடந்த திங்கள்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் இந்த ஆலையில் பணியாற்றிய முத்துராமலிங்கபுரம் குடியிருப்பைச் சோ்ந்த காா்த்திகேயன், சங்கீதா, லட்சுமி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
முத்துராமலிங்கபுரம் குடியிருப்பைச் சோ்ந்த தங்கராஜ் மனைவி மாரியம்மாள் (55), முனியாண்டி மனைவி நாகலட்சுமி (55), முத்துவேல் மனைவி மாரியம்மாள் (50) ஆகியோா் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் தங்கராஜ் மனைவி மாரியம்மாள் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நான்காக உயா்ந்தது. இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.