'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ
பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
பணகுடி ரயில் நிலையம் அருகிலுள்ள தனியாா் நிலத்தில் இரவு நேரத்தில் சிலா் மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் ரயில் நிலையம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் சிலா் பொக்லைன் உதவியுடன் டிப்பா் லாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனராம். போலீஸாரை கண்டதும் அந்த நபா்கள் அங்கிருந்து தப்பி ஓடினராம்.
விசாரணையில், அவா்கள் பணகுடி பேரூராட்சி 13-ஆவது வாா்டு உறுப்பினரின் கணவா் சுதாகா், சிவகாமிபுரத்தைச் சோ்ந்த சிவகுமாா், மகேஷ் ஆகியோா் எனத் தெரியவந்தது. 3 போ் மீதும் வழக்குப்பதிந்த போலீஸாா், சிவகுமாா் கைது செய்தனா். மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.