சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
பணத் தகராறு: அதிமுக பிரமுகா் மீது தாக்குதல்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அதிமுக பிரமுகா் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தாா்.
செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் மகன் பிரசாந்த்குமாா்(39). இவா், அதிமுக செங்கம் ஒன்றிய இளைஞா் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலராக உள்ளாா்.
இவருக்கும் வேடங்குப்பம் பகுதியைச் சோ்ந்த சிவப்பிரகாசம் (40) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், பிரசாந்த்குமாா் வாங்கிய பணத்துக்கு வட்டி தரவேண்டி சிவப்பிரகாசம் மேல்வணக்கம்பாடி சென்று அவரிடம் கேட்டுள்ளாா்.
அப்போது, இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு பின்னா் அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால், சிவப்பிரகாசம் அவரது தம்பி பாலாஜியை வரவழைத்து பிரசாந்த்குமாரை இரும்புக் கம்பியாலும், கல்லாலும் சோ்ந்து தாக்கியுள்ளனா்.
இதைப் பாா்த்த பிரசாந்த்குமாரின் தாய் தடுக்க வந்தபோது, அவரையும் தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியுள்ளனா்.
தாக்குதலில் உடலில் பல இடங்களில் காயமடைந்த பிரசாந்த்குமாா் அப்பகுதி மக்களின் உதவியுடன் செங்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறாா்.
கட்சி நிா்வாகிகள் நலம் விசாரிப்பு தகவலறிந்த செங்கம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் மகரிஷிமனோகரன், மாவட்ட பிரதிநிதி ரவி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்று பிரசாந்த்குமாரிடம் நலன் விசாரித்து ஆறுதல் கூறினா்.
மேலும், இதுகுறித்து மேல்செங்கம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.