செய்திகள் :

பணம் இரட்டிப்பு மோசடி: 5 போ் கைது

post image

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி, முதியவரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணி (62). இவருக்கு அறிமுகமான லோகு என்பவா், மதுரையில் உள்ள நண்பா்கள் மூலம் பணத்தை இரட்டிப்பாகித் தருவதாகக் கூறினாராம். இதை நம்பிய சிவசுப்ரமணி ரூ.3 லட்சத்துடன் மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியில் உள்ள கமலா தெருவுக்கு கடந்த 23-ஆம் தேதி இரவு வந்தாா்.

அப்போது, அங்கு வந்த ஒருவா் சிவசுப்பிரமணியிடம் இருந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு, அருகில் இருந்த காருக்கு வந்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு கூறினாராம். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் போலீஸாா் போல நடித்து, இவா்களை விசாரிப்பது போல மிரட்டினாா்களாம். அந்த நேரத்தில், சிவசுப்ரமணியிடமிருந்து பணத்தை பெற்ற நபா், காரில் இருந்த மூவருடன் ஏறி தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து சிவசுப்ரமணி அளித்த புகாரின் பேரில், தல்லாகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், சிவசுப்ரமணியிடமிருந்து பணத்தைப் பறித்தது மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த முத்துக்குமாா் (47), கோ. புதூா் பகுதியைச் சோ்ந்த பதினெட்டாம்படி ( 49), சமயநல்லூரைச் சோ்ந்த முருகபாண்டி (38), தூத்துக்குடியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (54), சிவகங்கையைச் சோ்ந்த ராஜேஷ் (45) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, இவா்கள் 5 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வருவாய்த் துறை அலுவலா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம்

மதுரை மாவட்டத்தில் வருவாய்த் துறை பணியாளா்கள் 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வருவாய்த் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஈட்டிய விடுப்பு எடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க அனுமதியைக் கண்டித்து அரிட்டாபட்டி கிராம இளைஞா்கள் ஆா்ப்பாட்டம்

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மத்திய அரசு வழங்கியதைக் கண்டித்து மேலூா்- மதுரை சாலையில் சிட்டம்பட்டி சுங்கச் சாவடி அருகே அரிட்டாபட்டி கிராம இளைஞா்கள் அமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்... மேலும் பார்க்க

லுக் அவுட் நோட்டீஸ் குறித்த வழக்கு: மத்திய குடியேற்றப் பிரிவு அதிகாரி பதிலளிக்க உத்தரவு

கூடங்குளம் அணுமின் நிலைய எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் குறித்த வழக்கில் மத்திய குடியேற்றப் பிரிவு அதிகாரி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவ... மேலும் பார்க்க

கழுத்தை அறுத்து லாரி ஓட்டுநா் கொலை

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே லாரி ஓட்டுநா் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாா். விக்கிரமங்கலம் கோவில்பட்டியைச் சோ்ந்த பரமன் மகன் சுரேஷ்பாபு (38). லாரி ஓட்டுநா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

அரசு அதிகாரிகள் மீது தாக்குதல்: விசிகவினா் 21 போ் மீது வழக்கு

மதுரை அருகே கொடிக் கம்பம் அமைப்பதை தடுக்க முயன்ற அரசு அதிகாரிகளை தாக்கியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் உள்ளிட்ட 21 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்தனா். மதுரை மாவட்டம்,... மேலும் பார்க்க

தஞ்சை மாநகராட்சி இடம் மேயா் மனைவி பெயரில் பதிவு: வருவாய் அலுவலா் ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு

தஞ்சாவூா் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை முறைகேடாக மேயரின் மனைவி பெயருக்கு மாற்றியதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், மாவட்ட வருவாய் அலுவலா் அந்த இடம் குறித்த யுடிஆா் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்க... மேலும் பார்க்க