செய்திகள் :

'பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை; தனியார் மது பாரில் ஒருவர் குத்திக் கொலை!' - புதுக்கோட்டை அதிர்ச்சி

post image

புதுக்கோட்டை எஸ்.எஸ் நகரைச் சேர்ந்தவர் நித்தியராஜ் (வயது: 40). இவர் புதுக்கோட்டை நகரத்தில் உள்ள டி.வி.எஸ் கார்னர் அருகில் உள்ள எஃப்.எல்.டு மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, காரைக்குடி குளோபல் மருத்துவமனையில் பார்மசிஷ்டாக பணியாற்றும், புதுக்கோட்டை (வல்லம்பர்) பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் அங்கு வந்திருக்கிறார். அவர் நித்தியராஜிடம் தனக்கு தரவேண்டிய 22,000 ரூபாயைத் திரும்ப கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், இடது மார்பருகே குத்தியதில் நித்தியராஜ் காயம் ஏற்பட்டு, துள்ளத் துடிக்க கீழே சரிந்தார்.

Murder - Representational Image
Murder - Representational Image

இதனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்று பார்த்தபோது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, சரவணன் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நித்தியராஜின் உடல் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு மேற்கொள்வதற்காகக் கொண்டுசெல்லப்பட்டது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தன் நண்பரை கொலை செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உபி: காதலியைக் கொன்று உடலுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்; யமுனையில் தேடும் போலீஸ்! - என்ன நடந்தது?

உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் காவல்துறையினர் 20 வயது பெண் கொலை வழக்கில் 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். அகன்ஷா என்ற அந்த 22 வயது பெண்ணின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டு யமுனா நதியில் மூழ்கடிக்கப்பட்டு... மேலும் பார்க்க

"கற்பை நிரூபிக்கக் கொதிக்கும் எண்ணெய்யில் விரலை விடு" - குஜராத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 30 வயது பெண் தனது கற்பை நிரூபிக்கக் கொதிக்கும் எண்ணெய்க்குள் விரலை விட வேண்டும் என அவரது நாத்தனாருடன் இன்னும் மூவர் இணைந்து வற்புறுத்தியதால் அவருக்குப் பலத்த தீக்... மேலும் பார்க்க

அரசு விடுதியில் மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்; வைரலான வீடியோவால் பரபரப்பு

அரசு விடுதியில் தங்கிப் படித்த மாணவனை சக மாணவர்கள் தாக்கி நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து வீடியோ எடுத்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செக்கானூரணி காவல் நிலையம்மதுரை மாவட்டம... மேலும் பார்க்க

நெல்லை: காதல் மனைவியைக் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த இளைஞர்; பகீர் வாக்குமூலம்

நெல்லை, கங்கைகொண்டான் அருகிலுள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான அன்புராஜ் என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், ... மேலும் பார்க்க

கரூர்: அரசு நிலத்தை ஆக்கிரமித்து திருமண மண்டபங்கள்; போலீஸார் பாதுகாப்புடன் இடிப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாயனூர் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில், அம்மா பூங்கா அருகில் மாயனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கற்பகவல்லி ரகுபதி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகச் சுமார் 50 சென்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; காவல் நிலையம் முன்பு விஷமருந்தி ஜோடி தற்கொலை செய்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சாலைப்புதூரைச் சேர்ந்தவர் தங்கவேல்சாமி. கார் டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். தங்கவேல்சாமி, கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள உறவினரின... மேலும் பார்க்க