செய்திகள் :

பணம் சேர்க்கும் ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா? மியூச்சுவல் ஃபண்ட் அடிப்படை வெபினார்

post image

நீங்க கஷ்டப்பட்டு, லிட்டர் கணக்குல வேர்வை சிந்தி சம்பாதிச்ச பணம், பேங்க் சேவிங்ஸ் அக்கவுண்ட்ல, ஏ.டி.எம் நைட் வாட்ச்மேன் மாதிரி தூங்கிட்டு இருக்கா? நிதிச் சுதந்திரம் அடையணும்னு நினைக்கிறீங்க, ஆனா முதலீடுன்னாலே, அது ஏதோ பயங்கரமான விஷயமா தெரியுதா?

இன்வெஸ்ட்
இன்வெஸ்ட்

இது உங்களுக்கு மட்டும் கிடையாது! நிறைய பேருக்கு இன்வெஸ்ட் பண்ணனும்னு ஆசை இருக்கு, ஆனா பயம், தயக்கம், குழப்பம் மற்றும் நேரமின்மை காரணமாக அதை அவங்க ஸ்டார்ட் பண்றதே இல்ல. ஆனா நீங்க ஒரேயொரு 90 நிமிஷம் மட்டும் செலவளிச்சா போதும், சும்மா கான்ஃபிடென்ட்டா இன்வெஸ்ட்மெண்ட்ல இறங்கலாம், எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?

விகடன் 'லாபம்' வழங்கும் 'மியூச்சுவல் ஃபண்ட் அடிப்படைகள்' வெபினார் 

 நடைபெறும் நாள்: மார்ச் 30, 2025, ஞாயிறு

 நேரம்: காலை 11 - 12.30 மணி 

 150 பேருக்கு மட்டுமே அனுமதி

 பேச்சாளர்கள்: ஜீவன் கோஷி தரியன், ரீஜினல் ஹெட் - தமிழ்நாடு,  ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் ஏ.எம்.சி & ஏ.ஆர்.குமார், கண்டெட் ஹெட், விகடன் லாபம்.

 முன்பதிவு அவசியம்! 

முன்பதிவு செய்ய, லிங்க் க்ளிக் பண்ணுங்க:  https://forms.gle/wWTxhdDozZCUWkVG9

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

நீங்க ஏன் இந்த வெபினார்ல கலந்துக்கணும்?

* மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எப்படி வேலை செய்யுதுங்கற அடிப்படைகளை முழுசா கத்துக்கோங்க.

* சின்ன சின்ன முதலீடுகள் எப்படி பெருசா வளருதுங்கிற ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க.

* எந்தத் தவறுகள்னால மக்கள் தேவையில்லாம பணத்தை இழக்குறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க.

* முதலீடு சம்பந்தமான உங்களின் கேள்விகளை கேளுங்க.

* முதலீட்டின் அடிப்படைகள் - ரொம்ப எளிமையா, எல்லாரும் புரிஞ்சுக்குற மாதிரி வழங்கப்படும்!

ஏன் நிறைய பேர் முதலீடு செய்றதில்ல? - நீங்க எப்படி விதிவிலக்கா இருக்கலாம்?

நிறைய பேர் முதலீடு செய்ய நினைப்பாங்க, ஆனா கடைசி வரை தொடங்கவே மாட்டாங்க, காரணம் 'பயம்'. இந்த பயத்தை போக்கும் ஒரே மருந்து என்ன தெரியுமா? - அறிவு. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எப்படி வேலை செய்யுதுங்கற அறிவு இருந்துட்டா போதும், முதல்ல உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். அவை எவ்ளோ எளிமையான, பாதுகாப்பான, லாபம் தரக்கூடிய முதலீடுன்னு புரிஞ்சுப்பீங்க. இதைத்தான் இந்த வெபினார்ல கத்துக்கொடுக்கப் போறோம்!

முதலீடு
முதலீடு

யாரெல்லாம் கலந்துக்கலாம்?

 தங்களோட பணத்தை பன்மடங்கு பெருக்கணும்னு நினைக்கிற மாதச் சம்பளக்காரர்கள்.

 தங்களின் லாபத்தை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் பெருக்க நினைக்கும் பிசினஸ் முதலாளிகள்.

 எங்கிருந்து ஆரம்பிக்கணும்னு தெரியாத முதல் முறை முதலீட்டாளர்கள்.

 தங்களோட பிள்ளைகளின் வருங்காலத்தை சிறப்பிக்க நினைக்கும் பெற்றோர்கள்.

 விலைவாசி உயர்வால தங்களோட சேமிப்பின் மதிப்பை இழக்குறோம்னு புரிஞ்சுக்கிட்டவங்க.

முதலீடு செய்யாம போனா வரும் பேராபத்து!

நீங்க ஒவ்வொரு மாதமும் முதலீட்டைத் தள்ளிப் போடப்போட உங்களுக்கு கிடைக்க வேண்டிய கணிசமான லாபத்தை இழக்குறீங்க! எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா? உதாரணத்துக்கு நீங்க மாசாமாசம் 10000 ரூபாய், 13% வளர்ச்சி தரும் மியூச்சுவல் ஃபண்டுல, 2045 வரைக்கும் முதலீடு பண்ணுனா உங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பிருக்கு. அதுவே 5 வருஷம் லேட்டா முதலீடு பண்ணா உங்களுக்கு கிடைப்பது வெறும் 50 லட்ச ரூபாய் மட்டும்தான்! அதுவே இன்னுமொரு 5 வருஷம் லேட்டா ஆரம்பிச்சா, உங்களுக்கு கிடைப்பது 23 லட்ச ரூபாய் மட்டுமே! இதேமாதிரி முதலீட்டைத் தள்ளிப்போடும் ஒவ்வொரு வருஷமும், மாசமும், நாளும் உங்களோட பணம் வளரும் வாய்ப்பு குறைஞ்சிட்டே போகுது.

வாய்ப்பு ஒரு தடவைதான் கதவைத் தட்டும்!

இது ஏதோவொரு வெபினார்னு நினைக்க வேணாம். உங்களின் நிதி பாதுகாப்புக்கும் நிதி சுதந்திரத்துக்கும் வழிவகுக்கும் ஒரு கோல்டன் டிக்கெட்டா கருதுங்க, வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

முக்கிய குறிப்பு: 150 பேருக்கு மட்டுமே அனுமதி. 

ரெஜிஸ்டர் செய்ய, லிங்க் க்ளிக் பண்ணவும்: https://forms.gle/wWTxhdDozZCUWkVG9

உங்கள் பணத்திற்கு நீங்கள் 'எஜமானி'யாக 12 கோல்டன் ரூல்ஸ்!

கையில் கொஞ்சம் காசு இருந்தால், நீதான் அதற்கு எஜமானி; கழுத்து வரைக்கும் காசு இருந்தால், அதுதான் உனக்கு எஜமானன்...இந்தப் பாட்டு ஞாபகமிருக்கிறதா...'இந்தப் பாட்டை மறக்க முடியுமா? இது நம்ம தலைவர் பாட்டே' எ... மேலும் பார்க்க

நாணயம் விகடன்: முதலீட்டுத் திட்டங்களைச் சரியாகத் தேர்ந்தெடுப்பது எப்படி?

நாம் முதலீடு செய்யும் போது, நம் இலக்குகளை நிர்ணயம் செய்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும். அப்போது அதற்காக முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வோம்.ஒவ்வொரு முதலீட்டுத் திட்டமும் சாதக பாதகங்களைக் கொண்டிர... மேலும் பார்க்க