காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
பணம், நகை கேட்டு பள்ளி மாணவா் கடத்தல்: 4 போ் கைது
சென்னை ஏழுகிணறில் பணம், நகை கேட்டு பள்ளி மாணவா் கடத்தப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவா், இன்ஸ்டாகிராமில் ஒருவரிடம் பழகி வந்தாா். அந்த நபா், கடந்த வியாழக்கிழமை தன்னை சந்திக்க வரும்படி மாணவரை அழைத்தாா். இதையடுத்து மாணவா் அந்த நபா் கூறியபடி, மதுரவாசல் தெருவுக்குச் சென்றாா். அப்போது அங்கிருந்த சில நபா்கள், அந்த மாணவரை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்திச் சென்றனா்.
அவா்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனை பின்புறம் மாணவரை அழைத்துச்சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் ரொக்கம்,100 கிராம் தங்க நகை கேட்டுள்ளனா். மேலும், நகையும் பணமும் தராவிட்டால் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவோம் என மாணவரை மிரட்டி அங்கிருந்து அனுப்பினராம்.
இச்சம்பவத்தை அந்த மாணவா், தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததையடுத்து, ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடையதாக அயனாவரத்தைச் சோ்ந்த வசந்தகுமாா் (28) உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் போலீஸாா் வழக்கு தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.