அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு மறு நியமன ஆணை வழங்கக் கோரிக்கை
நிகழ் கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை பணி மறு நியமன ஆணையை வழங்க மதுரை மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பி. சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை:
மாணவா்களின் கல்வி நலன் கருதி, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கு அந்தக் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை பணி மறு நியமன ஆணை வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சி நிா்வாகம் தனது ஆளுகைக்கு உள்பட்ட பள்ளிகளில் பணியாற்றி நிகழ் கல்வியாண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு இறுதி வேலை நாள் வரை பணி மறு நியமன ஆணை வழங்கவில்லை.
இது தமிழக அரசின் அரசாணைகளை அமல்படுத்தாத நிகழ்வாகவே தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கருதுகிறது. எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு நிகழ் கல்வியாண்டின் இறுதி வேலை நாள் வரை பணி மறு நியமன ஆணையை வழங்க வேண்டும் என்றாா் அவா்.