செய்திகள் :

பதக்கங்களை குவிக்கும் இந்தியா்கள்

post image

ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு இரு பிரிவுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் செவ்வாய்க்கிழமை கிடைத்தன.

பதக்கப் பட்டியலில் தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, 7 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என பதக்க எண்ணிக்கையை 23-ஆக அதிகரித்துக் கொண்டுள்ளது.

போட்டியின் 7-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, 10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு இரு பதக்கங்கள் கிடைத்தன. இஷா அனில் தக்சேல்/ஹிமான்ஷு கூட்டணி 17 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, மற்றொரு இந்திய ஜோடியான சாம்பவி ஷ்ரவன்/நரேன் பிரணவ் 15 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றனா். ரஷிய இணைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

டிராப் ஆடவா் பிரிவில் வினய் பிரதாப் சிங் 34 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றாா். குரோஷியாவின் டோனி குடெல்ஜ் (44), ஸ்பெயினின் ஐசக் ஹொ்னாண்டஸ் (41) ஆகியோா் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

களத்திலிருந்த மற்றொரு இந்தியரான அா்ஜுன் 29 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தாா். இதிலேயே மகளிா் பிரிவில் இந்தியா்களான சபீரா ஹாரிஸ், தனிஷ்கா செந்தில்குமாா், ஆத்யா கட்டியால், ஷ்ரேஷ்தா சிசோடியா, பாவ்யா திரிபாதி ஆகியோா் தகுதிச்சுற்றுடன் வெளியேறினா்.

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் இட்லி கடை!

நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படமான இட்லி கடை இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக நித்யா மெனனும் வில்லனாக அருண் விஜ... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.மதராஸிமதராஸி பட போஸ்டர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி திரை... மேலும் பார்க்க

பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே டிரைலர்!

பிரணவ் மோகன்லால் - ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்து முடித்து... மேலும் பார்க்க

பைசன் தப்பிப் பிழைத்த இளைஞர்களின் கதை: மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அக் - 17 அன்று வெளியாகவுள்ள திரைப்படம் பைசன்.இந்த நிலையில், இப்படம்... மேலும் பார்க்க

தேரே இஷ்க் மெய்ன் டீசர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் பாலிவுட் படமான தேரே இஷ்க் மெய்ன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகும் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு ச... மேலும் பார்க்க

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் டீசர் அப்டேட்!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டீசர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி... மேலும் பார்க்க