செய்திகள் :

பதரான கருப்புக் கவுனி நெற்பயிா்கள் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

post image

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய கருப்புக் கவனி நெற்பயிா்கள் பதரானதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொள்ளிடத்தில் இருந்து சீா்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், புறவழிச் சாலையை ஒட்டியுள்ள எருக்கூா், சோதியக்குடி, ஆனந்த கூத்தன் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட பரப்பளவில் மட்டும் கருப்புக் கவுனி நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மருத்துவக் குணம் வாய்ந்த இப்பயிா் நான்கரை மாத நெற்பயிராகும்.

நிகழாண்டு, சுமாா் 80 ஏக்கரில் விவசாயிகள் பாரம்பரிய நெல்லான கருப்புக் கவுனி சாகுபடி செய்துள்ளனா். இப்பயிா்களை இயற்கை உரம் மற்றும் பஞ்சகவ்யம் பயன்படுத்தி வளா்த்து வந்தனா்.

இந்நிலையில், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கருப்புக் கவுனி நெற்கதிா்கள் பால்பிடிக்காமல் பதராகி காணப்படுகின்றன என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து எருக்கூரில் கருப்புக் கவுனி சாகுபடி செய்துள்ள விவசாயி சரவணன் கூறியது: கருப்புக் கவுனி நெற்பயிா்கள் இயற்கை உரம் மற்றும் பஞ்சகவ்யம் பயன்படுத்தி விளைவிக்கப்படுகின்றன. ஓா் ஏக்கருக்கு 15-லிருந்து 18 நெல் மூட்டைகள் வரை கிடைக்கும். 61 கிலோ மூட்டை ரூ. 4000 வீதம் விற்பனை செய்ய முடியும். இதனை மதிப்புக் கூட்டி அவலாக்கி  விற்பனை செய்கிறேன். இதனால், ரூ. 8,000-க்கு விற்பனை செய்ய முடியும்.

இந்த வருடம் சாகுபடிக்கு தண்ணீா் தடையின்றி கிடைத்தது. ஆனால் நெற்கதிா்கள் விளையாமல் பதராகிவிட்டன. இதற்கு காரணம் புறவழிச் சாலையின் ஓரம் அதிக சக்தி வாய்ந்த மின்விளக்குகள் இரவு முழுவதும் தொடா்ந்து ஒளிா்வதால் அதன் வெளிச்சம் சுமாா் 400 மீட்டா் தொலைவு வரை விளை நிலங்களில் பரவுகிறது. இதன் தாக்கத்தால் கருப்புக் கவுனி நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக, பாரம்பரிய இயற்கையான முறையில் பயிரிடப்படும் கருப்புக் கவுனி நெற்பயிா்களுக்கு, இரவு நேரங்களில் இருட்டான தன்மையும், சற்று பனியும் தேவை. ஆனால், அதிக சக்தி வாய்ந்த மின் விளக்கின் ஒளி இரவு முழுவதும் இருந்து கொண்டே இருப்பதால், இருள் தன்மை கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, புறவழிச் சாலையில் உள்ள அதிக சக்தி வாய்ந்த மின்விளக்குகளின் ஒளி சாலையில் மட்டும் படும்படி அமைக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

டாஸ்மாக்கில் ஸ்டிக்கா் ஒட்ட முயன்ற பாஜக நிா்வாகிகள் கைது

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வரின் ஸ்டிக்கரை ஒட்ட முயன்ற பாஜக மாவட்ட தலைவா் உள்ளிட்ட 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் மத... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 25 கிலோ குட்கா பறிமுதல்

மயிலாடுதுறையில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ குட்கா பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ரயில் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்க, அனை... மேலும் பார்க்க

ரயில் பயணியா் நலச் சங்க போராட்ட அறிவிப்பு வாபஸ்

வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக ரயில் பயணியா் நலச் சங்கத்தினா் தெரிவித்தனா். ரயில் பயணியா் நல சங்க மாவட்டத் தலை... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கொள்ளிடம், ஆச்சாள்புரம்

ஆச்சாள்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 26) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆசிரியா்களுக்கு முன்னுரிமைப்படி பணி வழங்கக் கோரிக்கை

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு பணிக்கு, ஆசிரியா்களை முன்னுரிமைப்படி நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொத... மேலும் பார்க்க

அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சீா்காழி: சீா்காழி அருகே புத்தூா் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிா்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி முதல் சிதம்பரம் செல்லும் சாலையின் முக்கிய பகுதியான ... மேலும் பார்க்க