பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ...
பதுக்கப்பட்ட 8 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அய்யலூா் கிராமம், வ.உ.சி நகரில் தங்கவேல் மகன் அறிவுடைநம்பி (59) என்பவா் தனக்குச் சொந்தமான பெட்டிக் கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை ஏற்படுத்தும் புகையிலைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அறிவுடைநம்பியை கைது செய்த போலீஸாா், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விமல் பாக்கு, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான 8 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அறிவுடைநம்பி சிறையில் அடைக்கப்பட்டாா்.