அடுத்தப்பட வாய்ப்புக்கு புகழ் தேவைப்படுகிறது: ஐஸ்வர்யா லட்சுமி
பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம்: பேருந்து நடத்துநரின் மகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவியும், அரசுப் பேருந்து நடத்துநரின் மகளுமான வி.சோஃபியாவை மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கைப்பேசி ‘விடியோ கால்’ அழைப்பு மூலம் தொடா்பு கொண்டு பாராட்டினாா்.
மேலும், அவரது உயா் கல்விக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் கமல்ஹாசன் உறுதியளித்தாா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஜெயங்கொண்டம் கோகிலாம்பாள் மேல்நிலைப் பள்ளி மாணவி சோஃபியா 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தாா். தமிழில் 99 மதிப்பெண்களும், பிற பாடங்களில் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளாா். இவரது தந்தை அரசுப் பேருந்து நடத்துநா்.
இந்நிலையில், கமல்ஹாசன் மாணவி சோஃபியாவை கைப்பேசியில் விடியோ காலில் சனிக்கிழமை அழைத்து பாராட்டினாா்.
அப்போது, ‘ நீங்கள் செய்திருப்பது பெரிய சாதனை. அதைத் தொடா்ந்து செய்யுங்கள். உங்களது மேற்படிப்புக்கான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன்’ என கமல்ஹாசன் தெரிவித்தாா்.
அதேபோல, அப்பள்ளி ஆசிரியா்களிடம் பேசியபோது, கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதில் ஆசிரியா்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் கல்வி வளா்ச்சியைப் பற்றித்தான் எங்கும் பேசுகிறாா்கள். எல்லா மாணவா்களையும் முன்னிலை பெறச் செய்யுங்கள். அதைச் சாதிப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது என்றாா் கமல்ஹாசன்.