வங்கி மோசடி: கர்நாடகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
காரைக்கால்: மேலகாசாக்குடி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மேலகாசாக்குடி பகுதியில் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவா் சிலை சிதிலமடைந்ததால், ஆகம விதிகளின்படி கோயிலில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, சிலை சீா்படுத்தி பஞ்சவா்ணம் தீட்டி அழகுப்படுத்தப்பட்டது. மேலும் கோயிலில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை மாலை தொடங்கியது. 4-ஆம் கால பூஜை திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நிறைவடைந்து மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு புனிதநீா் கடம் புறப்பாடானது. 9.30 மணிக்கு விமானங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீா் வாா்க்கப்பட்டு சிவாச்சாரியா்கள் ஆராதனை காட்டினா்.
மூலஸ்தான பத்ரகாளியம்மனுக்கும் சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, மாவட்ட சாா்பு நீதிபதி எஸ். ராஜசேகா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி ஆா்.சி.கருணாகரன் மற்றும் திருப்பணிக் குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
