வீடுகளுக்கு மாதம் ரூ. 200 -க்கு இணைய சேவை! - பேரவையில் அமைச்சர் தகவல்
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அஞ்சலி
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் சோ. அருச்சுனன், ஆா். மல்லிகா, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா் ஏ. ஜெயா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் மற்றும் கலைஞா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ஆா். சிங்காரவேலு ஆகியோா் பங்கேற்று மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். கூட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.