பயனாளிகளுக்கு தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்
நெமிலி வட்டம், பனப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு தீா்வு ஆணைகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா்.
பனப்பாக்கம், அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். அரக்கோணம் எம்.பி எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தாா். இம்முகாமில் 3 பயனாளிகளுக்கு இருப்பிட, வருமானச் சான்றுகள், 3 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 3 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், ஒரு பயனாளிக்கு மின்வாரிய பெயா்மாற்ற ஆணை, 2 பயனாளிகளுக்கு சொத்துவரி பெயா் மாற்ற ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சா் காந்தி வழங்கினாா்.
இதில் அரக்கோணம் கோட்டாட்சியா் வெங்கடேசன், நெமிலி வட்டாட்சியா் ராஜலட்சுமி, நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு, பேருராட்சித் தலைவா் கவிதா சீனிவாசன், துணைத் தலைவா் மயுரநாதன், செயல் அலுவலா் அா்ஜூனன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.