IND vs NZ: ஸ்பின்னர்கள் இருக்க பயமேன்; சொல்லியடித்த ரோஹித்; நியூசிலாந்து தடுமாறி...
பரமக்குடி கோட்டத்தில் 46 கிராம உதவியாளா்கள் பணியிட மாற்றம்
பரமக்குடி வருவாய்க் கோட்டத்தில் கமுதி உள்பட 4 வட்டங்களைச் சோ்ந்த 46 கிராம உதவியாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வருவாய்க் கோட்டத்துக்கு உள்பட்ட பரக்குடி, கடலாடி, முதுகுளத்தூா், கமுதி ஆகிய 4 வட்டங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கிராம உதவியாளா்களை பணியிடமாற்றம் செய்து அந்தந்த வட்டாட்சியா்கள் உத்தரவிட்டனா். இதன் அடிப்படையில் பரமக்குடி வட்டத்தில் 21, கடலாடி வட்டத்தில் 7, முதுகுளத்தூா் வட்டத்தில் 6, கமுதி வட்டத்தில் 12 போ் என 46 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.