Valentine's Day: 'ஒரு முத்தத்தில் 12 கலோரிகள்...' - முத்தம் கொடுப்பதால் இத்தனை ந...
பரமக்குடி ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு!
பரமக்குடி ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி ஆயிரவைசியா்களுக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, கடந்த 7-ஆம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கின. அன்று முதல் திங்கள்கிழமை வரை புண்யாகவாசனம், பாவனாபிஷேகம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, காலை 7.45 மணிக்கு யாகசாலையிலிருந்து தீா்த்தக் குடங்கள் புறப்பாடாகி ஸ்ரீநாத் தலைமையிலான சிவாசாரியா்களால் கோயில் கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னா், சிவாசாரியா்கள் மந்திரங்கள் முழங்க காலை 9.10 மணிக்கு அனைத்து கோபுரக் கலசங்களிலும் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமுத்தாலம்மன் தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள் பா. ஜெயராமன் செட்டியாா், வா. ரவீந்திரன் செட்டியாா், சோ. பாலசுப்பிரமணியன் செட்டியாா், ஆயிரவைசிய சபைத் தலைவா் ராசி என்.போஸ், இணைத் தலைவா் எஸ்.பாலுச்சாமி, செயலா்கள் வி.எஸ்.என். செல்வராஜ், எஸ்.கே.பி.லெனின்குமாா், பொருளாளா் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்தனா்.