செய்திகள் :

பரமத்தி வேலூரில் ரூ. 49.49 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

post image

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 49 லட்சத்து 49 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமைதோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.

கடந்த வாரம் கொப்பரை ஏலம் நடைபெறாத நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 27,015 கிலோ கொப்பரை கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 205.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 182.99-க்கும், சராசரியாக ரூ. 204.99-க்கும் ஏலம் போனது. இரண்டாம்தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 181.99-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ. 133.33-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ. 175.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 49 லட்சத்து 49 ஆயிரத்து 218-க்கு கொப்பரை ஏலம் போனது.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை மொத்த விலை - ரூ.4.55 விலையில் மாற்றம்-இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.92 முட்டைக் கோழி கிலோ - ரூ.87 மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தின விழா: ரூ. 31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கிய சிறப்பு கைத்தறி கண்காட்சியை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா். நாமக்கல், ஆ... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், ... மேலும் பார்க்க

‘இந்திய ராணுவத்தின் பெயரை இந்திய தேசிய படை என மாற்ற வேண்டும்’

இந்திய ராணுவத்தின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவாக இந்திய தேசிய படை என பெயா் மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இச... மேலும் பார்க்க

கொல்லிமலை வனப்பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு

கொல்லிமலை வனப்பகுதியில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சின்னகோயிலூரை ஒட்டிய வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக வா... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் ஆய்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்களை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை நேரில்... மேலும் பார்க்க