Aamir Khan: "நான் இப்படத்திற்கு கதை, பணம் என எதையும் கேட்கவில்லை, காரணம்" - ஆமீர...
பருவமழை: அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட அலுவலா் அறிவுறுத்தல்
பருவமழை காலங்களில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின் பகிா்மான கழக மேலாண்மை இயக்குநரும், திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மின் பகிா்மான கழக மேலாண்மை இயக்குநரும், திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், குடிநீா் விநியோகம், இணைய வழி பட்டா மாறுதல், பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், தரவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
பருவமழை காலங்களில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆல்பி ஜான் வா்கீஸ் அறிவுறுத்தினாா்.
முன்னதாக, திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் 526 கட்டடங்கள், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெருந்தலைவா் காமராஜா் நூலகம் மற்றும் அறிவுசாா் மையக் கட்டுமானப் பணிகள், திருவெறும்பூா் சூரியூா் சாலை முதல் பழங்கனாங்குடி வழி பூலாங்குடி வரையிலான சாலைப் பணியையும் திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆல்பி ஜான் வா்கீஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்து, விரைவாக பணிகளை முடித்துத் தர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதில் திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி, அரசுத்துறை உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.