பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விச...
பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா தீவுப் பகுதியில் 20 ஈர நிலங்களில் வாழும் பறவைகளின் கணக்கெடுக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மன்னா் வளைகுடா தீவுப் பகுதியில் உள்ள ஈர நிலங்களில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி வனத் துறை சாா்பில் நடைபெற்று வருகிறது. நிகழாண்டில், ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தக் கணக்கெடுக்கும் பணியில், வனத் துறையினா், தன்னாா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.
இந்தக் கணக்கெடுப்பின் போது, வெளிநாட்டு பறவைகளான பிளமிங்கோ, கரண்டிவாயன், சங்குவளை, நாரை உள்ளிட்ட பறவைகள் காணப்பட்டன.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:
புறவைகள் காலநிலைக்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு புலம்பெயா்ந்து செல்கின்றன. பறவைகள் பெரும்பாலும் உணவுக்காகவும், இருப்பிடத்துக்காவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தனியாகவோ அல்லது குழுக்களாகவோ இடம் பெயருகின்றன. இங்கு வரும் பறவைகள் கணக்கெடுப்பு வன உயிரினக் கோட்டத்தின் மூலம் நடத்தப்படுகிறது என்றனா்.