தனிப்பட்ட பயணத்திற்கு அரசு வாகனத்தை பயன்படுத்திய அமைச்சர் ராஜிநாமா!
பறவை கூடு சூப்; உலகிலேயே காஸ்ட்லி; பருக ஆர்வம் காட்டும் மக்கள்; என்ன காரணம்?
உலகெங்கிலும் உள்ள உணவுப் பழக்கவழக்கங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை. சில உணவுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழைமையானயானதாக இருக்கும், சில உணவுகள் விலை உயர்ந்ததாக இருக்கும்.
அப்படி இங்கு பறவையின் கூடு நிறைந்த சூப் உலகின் மிக விலை உயர்ந்ததாகக் காணப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
சீனா, தைவான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு சிறிய பறவையான ஸ்விஃப்ட்லெட்டின் கூடுகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பறவைக் கூடு சூப் சீன மக்களிடையே மிகவும் பிரபலம்.
இந்த சூப் பல்வேறு நன்மைகளை வழங்குவதாக சீன மக்கள் நம்புகின்றனர். இந்த சூப்பின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், இது சரும பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எனவும் சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஆஸ்துமா அல்லது நாள்பட்ட இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளைப் போக்கவும், பசியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுவதாக சீன மக்கள் நம்புகின்றனர். இதனைப் பருக சீன மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சீன மக்கள் மட்டுமல்லாது தற்போது இணைய பயனர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.
சிவப்புக் கூடுகள் என்று அழைக்கப்படும் மிகவும் அரிதான பறவையின் கூடு ஒரு கிலோ $10,000 (தோராயமாக ரூ. 8 லட்சம்) மதிப்புடையது. வெள்ளை மற்றும் கருப்புக் கூடுகளின் விலை ஒரு கிலோ $5,000 முதல் $6,000 (தோராயமாக ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம்) வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.